சென்னை: சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய வாகன நிறுத்தத்தில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, வரும் 1ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.
2.5 லட்சம் சதுர அடி பரப்பளவிலான இந்த வாகன நிறுத்துமிடத்தில் ஒரே நேரத்தில் 2,000-க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்துவதற்கான வசதி உள்ளது. இதைத் தவிர்த்து பார்வையாளர்களுக்காக வணிக வளாகம், உணவகங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மேற்குப்புற வாகன நிறுத்துமிடத்தில் 3 மின்சார சார்ஜ் முனையங்களும், கிழக்குப்புறத்தில் 2 முனையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கங்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.