அமெரிக்கா தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக 88 சதவீத அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், கடந்த 6 மாதங்களில் அதிகரித்து வரும் பணவீக்க விகிதம், கருக்கலைப்பு உரிமை, துப்பாக்கி சூடு தொடர்பான விவகாரங்களில் அரசு மக்களுக்கு உதவக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என 91 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.