இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினை இட்டுள்ளார்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜேவிபியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.