பெங்களூரில் மோசடி.. பணம் பறிக்கும் போலி கால் சென்டர்..!

உலகில் தொழில்நுட்பம் வளர வளர, அதே தொழில்நுட்பம் மக்களுக்கு ஆபத்தாகவும், பாதிப்பாகவும் மாறி வருவதைப் பல இடங்களில், பல நேரத்தில் பார்த்துள்ளோம். இந்த வரிசையில் வெளிநாட்டில் இருப்பவர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் பெங்களூரில் சிக்கியுள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் பணம் பறிக்கும் கும்பல் ஐடி நிறுவனத்தைப் போல் டெக் பார்க்-ல் அலுவலகத்தை வைத்து, 100க்கும் அதிகமானவர்களுக்கு வேலைக்கு ஆள் வைத்து மோசடி செய்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.

VIVO: போலி ஆவணத்தில் வந்த சீனர்கள்.. விவோ நிறுவனத்தில் உயர் பதவி..!

பெங்களூர்

பெங்களூர்

ஐடி நகரம் எனச் செல்ல பெயர் கொண்ட பெங்களூரில் அதிகப்படியான நிறுவனங்கள் இருக்கும் WhiteField பகுதியில் எதிக்கல் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் மற்றும் காயத்ரி டெக் பார்க் என்ற இரு நிறுவனம் மக்களை ஏமாற்றும் போலியான சைபர் கால் சென்டரை வைத்து நடத்தி வருவதைப் பெங்களூர் காவல் துறை அறிந்துகொண்டு ஜூலை 8ஆம் தேதி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

72 ஊழியர்கள்

72 ஊழியர்கள்

பல ஆயிரம் வெளிநாட்டினரை ஏமாற்றி, மிரட்டி பணப் பறித்து வந்த எதிக்கல் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் மற்றும் காயதிரி டெக் பார்க் ஆகிய இரு நிறுவனங்களின் 72 ஊழியர்கள், இந்த மோசடி கும்பலின் தலைவர்கள் (குஜராத்-ஐ சேர்ந்தவர்கள்) எனப் பலரை பெங்களூர் காவல் துறை கைது செய்துள்ளது.

மோசடி
 

மோசடி

இவ்விரு நிறுவனங்களும் அமெரிக்காவில் இருப்பவர்களை டார்கெட் செய்து தாங்கள் வங்கி, வருமான வரித் துறை அதிகாரிகள் போல் காட்டிக்கொண்டு, தங்கள் கணக்கில் சந்தேகத்திற்கு இடமான பணப் பரிமாற்றம் அல்லது கணக்கில் காட்டப்படாத பணம் தங்களின் வங்கி கணக்கில் இருப்பது என்பது போல் கூறி ஏமாற்றி, அதை இந்தப் போலி ஆசாமிகள் சரி செய்வதாகக் கூறி பணம் பறித்து வந்தது பெங்களூர் காவல் துறை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

கிப்ட் கார்டுகள், கிரிப்டோகரன்சி

கிப்ட் கார்டுகள், கிரிப்டோகரன்சி

இந்தப் போலி கால் சென்டர் ஊழியர்களின் பேச்சுக்கு பயந்து ஏமாற்றும் நபர்களிடம் இருந்து சமூகப் பாதுகாப்பு எண்கள், வங்கி ஏசிசி விவரங்கள் போன்ற முக்கியமான விபரங்களைப் பெறுவது மட்டும் அல்லாமல் அவர்களிடம் பணத்தை அமேசான் கிப்ட் கார்டுகள், கிரிப்டோகரன்சி போன்ற பணப் பரிமாற்ற பயன்பாடுகள் மூலம் பணத்தைப் பறித்து உள்ளனர்.

2 கோடி பறிமுதல்

2 கோடி பறிமுதல்

பெங்களூர் காவல் துறை அதிகாரிகள் இவ்விரு நிறுவனத்தில் செய்த சோதனையில் 127 டெஸ்க்டாப்கள், 4 லேப்டாப்கள், 150 ஹெட்போன்கள், 10 இன்டர்னல் ஹார்டு டிஸ்க்குகள், 6 ஐபோன்கள், 3 சொகுசு கார்கள், 2 பள்ளி வேன்கள், ஒரு டெம்போ டிராவலர் மற்றும் ₹18 லட்சம் ரொக்கம் உட்பட ₹2 கோடி மதிப்பிலான பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பள்ளி வேன்

பள்ளி வேன்

எதிக்கல் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் மற்றும் காயதிரி டெக் பார்க் ஆகிய இரு நிறுவனங்களின் ஊழியர்கள் யாருக்கம் சந்தேகம் வர கூடாது என்பதற்காகப் பள்ளி வேன்களில் தான் அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bengaluru police raid 2 fake call centre in Whitefield; items worth ₹2 crore seized

Bengaluru police raid 2 fake call centre in Whitefield; items worth ₹2 crore seized பெங்களூரில் மோசடி.. பணம் பறிக்கும் போலி கால் சென்டர்..!

Story first published: Saturday, July 9, 2022, 17:58 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.