வேற லெவலில் அமெரிக்காவில் இந்திய வம்சாவழி பெண்கள்.. ஃபோர்ப்ஸ் பட்டியலில் உள்ள ஐவர்!

ஆண்களுக்கு நிகராக தற்போது பெண்கள் உலக அளவில் பெரிய பதவிகளை பெற்று அதிக அளவில் சம்பாதித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இந்திய பெண்கள் இந்தியாவில் மட்டுமின்றி தங்கள் திறமையை உலக அளவில் நிரூபித்து வருகின்றனர். ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய பெண்கள் பலர் இடம் பெற்றுள்ளனர் என்பதை ஒவ்வொரு வருடமும் வெளியாகும் பட்டியலை பார்த்தால் தெரியும்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான அமெரிக்க பெண் பணக்காரர்களின் பட்டியலில் 5 இந்திய பெண்கள் இடம் பெற்றுள்ளார்கள் என்பது உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கும் ஓர் அம்சமாக உள்ளது. அந்த ஐந்து பெண்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

ஜெய ஸ்ரீ உல்லால் முதல் நீரஜா சேத்தி வரை.. அமெரிக்காவினை கலக்கும் இந்திய வம்சாவளி பெண்கள்!

ஜெயஸ்ரீ உல்லால்

ஜெயஸ்ரீ உல்லால்

அமெரிக்காவின் பணக்கார பெண்களில் ஒருவரான உல்லால் லண்டனில் பிறந்து புது டெல்லியில் வளர்ந்தார். டெல்லியில் கான்வென்ட் ஆஃப் ஜீசஸ் & மேரி பள்ளியில் படித்த அவர் சான் பிரான்சிஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் மற்றும் சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மை ஆகியவற்றை படித்தார்.

போர்ப்ஸ் பட்டியல்

போர்ப்ஸ் பட்டியல்

அதன்பின் அமெரிக்கா சென்ற ஜெயஸ்ரீ அரிஸ்டா நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரியானார். படிப்படியாக தனது திறமையை வளர்த்து தற்போது அமெரிக்காவின் பணக்கார பெண்களின் பட்டியலில் உள்ள ஐந்து இந்திய – அமெரிக்கர்களில் ஒருவராக உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு . $1.9 பில்லியன் என்பதும் போர்ப்ஸ் பட்டியலில் 15வது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பங்குகள்
 

பங்குகள்

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அவர் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கும் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் நிறுவனமான அரிஸ்டாவில் வைத்திருக்கும் பங்குகள் காரணமாக அவர் இந்தப் பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 61 வயதான ஜெயஸ்ரீ அரிஸ்டாவின் பங்குகளில் 5% வைத்திருக்கிறார், அதில் சில அவரது இரண்டு குழந்தைகள், மருமகள் மற்றும் மருமகன்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

வருவாய்

வருவாய்

2020 செப்டம்பரில் கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனமான ஸ்னோஃப்ளேக்கின் இயக்குநர்கள் குழுவிலும் ஜெயஸ்ரீ உள்ளார், அதே ஆண்டில் 2.3 பில்லியன் டாலர் வருவாயைப் பதிவு செய்தார்.

நீரஜா சேத்தி

நீரஜா சேத்தி

போர்ப்ஸ் பட்டியலில் உள்ள இந்திய-அமெரிக்கர்களில் ஜெயஸ்ரீ மட்டுமின்றி 1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நீரஜா சேத்தி 24வது இடத்தில் உள்ளார். சேத்தி 1980 ஆம் ஆண்டு வெறும் $2,000 ஆரம்ப முதலீட்டில் தனது கணவர் பாரத் தேசாய் உடன் இணைந்து ஐடி ஆலோசனை மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனமான சின்டெல்லை நிறுவினார்.

நேஹா நர்கடே

நேஹா நர்கடே

அதேபோல் கிளவுட் நிறுவனமான கன்ஃப்ளூயண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான நேஹா நர்கடே இந்தப் பட்டியலில் 57வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு $900 மில்லியன்.

இந்திரா நூயி

இந்திரா நூயி

பெப்சிகோவின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திரா நூயி 320 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 85வது இடத்தில் உள்ளார்.

ரேஷ்மா ஷெட்டி

ரேஷ்மா ஷெட்டி

இறுதியாக, ரேஷ்மா ஷெட்டி ஃபோர்ப்ஸின் அமெரிக்காவின் பணக்கார பெண்களின் பட்டியலில் கடைசி இந்திய-அமெரிக்கர் ஆவார். ஜிங்கோ பயோவொர்க்ஸின் 41 வயதான இவருடைய சொத்து மதிப்பு $220 மில்லியன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

5 Indian-origin women on America’s Richest Self-Made Women’s list!

5 Indian-origin women on America’s Richest Self-Made Women’s list! | அமெரிக்காவில் கொடிகட்டி பறக்கும் 5 இந்திய கோடீஸ்வர பெண்கள்!

Story first published: Saturday, July 9, 2022, 17:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.