போராட்டக்காரர்களிடம் வீழ்ந்தது இலங்கை அதிபர் மாளிகை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபயா தப்பியோடியதை தொடர்ந்து, அவர் வசித்த மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.

latest tamil news

அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் கோத்தபயா அங்கு இல்லாததால், அலுவலகத்தை சூறையாடினார். தொடர்ந்து அங்கிருந்த நீச்சல் உற்சாகமாய் குளித்த பின்னர் அவர்களுக்கு ராஜவிருந்து அளிக்கப்பட்டது. படுக்கை அறையில் இருந்த கட்டிலிலும் அமர்ந்தும், படுத்தும் கிடந்தனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

latest tamil news

கைப்பற்றினர்

போராட்டத்தில் கலந்து கொள்ள கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் வரிசையாக ஏராளமானோர் கொழும்பு நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். போராட்டக்காரர்கள் பழைய பார்லிமென்ட் கட்டடத்தையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

கைகோர்ப்பு

அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை, ராணுவத்தினர் எவ்வளவு முயன்றும் தடுக்க முடியவில்லை. அவர்களை தாண்டி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் தன்னுடைய ஆயுதத்தை போராட்டக்காரர்களிடம் ஒப்படைத்து விட்டு அவர்களுடன் இணைந்து கொண்டார். அவரை போராட்டக்காரர்கள் கைதட்டி வரவேற்றனர்.

latest tamil news

சொகுசு காரில்…

அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய கோத்தபயா, சொகுசு காரில் தப்பி சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. அவர் மாலத்தீவுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில் சில ஊடகங்கள், கோத்தபயா இன்று இரவு துபாய்க்கு செல்ல உள்ளதாகவும் அங்கிருந்து ராஜினாமா தொடர்பான தகவலை வெளியிடவும் வாய்ப்புள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.

அதேபோல், சிலர் கப்பலில் தப்பி செல்லும் வீடியாக்களும் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் மகிந்த மற்றும் கோத்தபயாவிற்கு நெருக்கமானவர்கள் எனக்கூறப்படுகிறது. மக்களின் போராட்டம் காரணமாக அவர்கள் தப்பி செல்வது தெரியவந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.