GALEX தொலைநோக்கி வெளிப்படுத்தும் பிரபஞ்ச ரகசியம்

மண்டை ஓடு போல தோற்றமளிக்கும் சிக்னஸ் லூப் நெபுலாவின் படத்தை நாசா பகிர்ந்துள்ளது. அதனுடன் சில சுவாராசியமான விஷயங்களையும் நாசா பகிர்ந்துள்ளது. 

நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் சிக்னஸ் லூப் நெபுலாவின் அற்புதமான படத்தைப் பகிர்ந்துள்ளது. இது ஒரு “சிறிய மண்டை ஓடு” போல் தெரிவதாக இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்த ஒருவர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்..

சிக்னஸ் லூப் நெபுலாவின் விஸ்பி ப்ளூ ஸ்விர்ல்ஸ், 5,000 முதல் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு பெரிய நட்சத்திர வெடிப்பின் விளைவாகும் என்று நாசா கூறுகிறது.

மேலும் படிக்க | விலங்குகளின் இறைச்சியிலும் கலந்து விட்டதா மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்?

சிக்னஸ் லூப் என்பது சிக்னஸ் விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு பெரிய சூப்பர்நோவா எச்சம் (SNR) ஆகும். இந்த நெபுலா போன்ற சூப்பர்நோவா எச்சங்கள் “நட்சத்திர பரிணாமத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன, கனமான கூறுகளால் விண்வெளியை வளப்படுத்துகிறது மற்றும் நட்சத்திர வாயுவை அழுத்துவதன் மூலம் புதிய நட்சத்திரங்களை உருவாக்குவதைத் தூண்டுகிறது

இதை நாசா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் விளக்கமாக கூறுகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NASA (@nasa)

Galaxy Evolution Explorer (GALEX) தொலைநோக்கியானது, இங்கு காணக்கூடிய வாயு மற்றும் தூசி சூப்பர்நோவாவிலிருந்து வரும் அலையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்வதாக நாசா கூறுகிறது.

கேலெக்ஸ் என்பது ஒரு சுற்றுப்பாதை விண்வெளி தொலைநோக்கி ஆகும், இது பிரபஞ்சத்தில் உருவாகும் நட்சத்திரங்களின் வரலாற்றை அளவிட UV அலைநீளங்களில் அவதானிப்புகளை செய்தது. பிக் பேங்கிற்கு முந்தைய எல்லா வழிகளிலும் அவதானிப்புகள் செய்யப்பட்டதாக நாசா கூறியது.

சிக்னஸ் லூப் இரவு வானில் முழு நிலவின் அளவை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்  படிக்க | Processed Food: பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு குட்பை சொல்ல இதைவிட வேற காரணம் தேவையா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.