ஜனாதிபதியும் பிரதமரும் முடிந்தவரையில் கூடியவிரைவில் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும்.
பாராளுமன்ற ஜனநாயக நடைமுறைக்கு அமைவாகவும் ,அரசியல் யாப்பு அமைவாக அடுத்த நடவடிக்கையாக பதில் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்காக 7 நாட்களுள் பாராளுமன்றத்தை கூட்டி பொது உடன்பாட்டில் தீர்மானம் மேற்கொள்ளபட வேண்டும் என்று இன்று நடைபெற்ற பாராளுமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (09) நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபாநாயகர், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றித்தின் மேற்கொள்ளப்படும் பொது உடன்பாட்டில்; தெரிவாகும் ஜனாதிபதியின் கீழ் தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துப்படுத்தும் சர்வகட்சி மக்கள் பிரதிநிதிகளின் உடன்பாட்டுக்கு அமைவாக புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைத்தல்;
இதன் பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுத் தேர்தலை நடத்தி பொது மக்களுக்கு புதிய பாராளுமன்றத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கல் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக பிரதமரினால் மூன்று மாற்று ஆலோசனைகளும் இதன் போது முன்வைக்கப்பட்டுள்ளன:
1. ஜனாதிபதி உடனடியாக பதவி விலகி பிரதமரை பதில் ஜனாதிபதியாக நியமித்தல்
2. அவ்வாறு நியமிக்கப்பட்டு அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைத்தல் அல்லது
3. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் வெளியேறி பாராளுமன்றத்தின் மூலம் பிரதியொருவர் பதில் ஜனாதிபதி பதவிக்கு நியமித்து , அதன் பின்னர் அனைத்து தரப்பினரின் உடன்பாட்டுடன் புதிய பிரதமரை நியமித்தல் ,இடைக்கால அரசாங்கத்தை அமைத்தல் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கல் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.