பதவி விலகுகிறார் கோட்டாபய ராஜபக்ச: திகதியை அறிவித்த இலங்கை சபாநாயகர்!



இலங்கையில் சனிக்கிழமையான இன்று பொதுமக்கள் போராட்டம் பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13ம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்வார் என தகவல் வெளிவந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜூலை 9ம் திகதியான இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக் குழுவினர், அங்குள்ள நீச்சல்குளம், சமயலறை என அனைத்தையும் ஆக்கிரமித்து கொண்டுள்ளனர்.

மேலும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் அதுவரை இந்த போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

இந்தநிலையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வரும் 13ம் திகதி தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ய இருப்பதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: தீபற்றி எரியும் ரணில் விக்கிரமசிங்க இல்லம்: உச்சக்கட்ட பரபரப்பில் இலங்கை!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என இலங்கை மக்கள் மாதக்கணக்கில் போராடி வருவது தற்போது குறிப்பிடதக்கது.      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.