ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்ற டெட்சுயா யமகாமி வீட்டில் இருந்து விதவிதமான துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஷின்சோ அபேவை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி போன்ற ஆயுதத்தை டெட்சுயா, வீட்டிலேயே தயாரித்துள்ளதாக ஜப்பான் காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது வீட்டிலிருந்து விதவிதமான இரும்பு குழாய்களைக் கொண்ட 3 துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களைக் கொண்டு தயாரித்த குண்டுகளைப் பயன்படுத்தி அபேவை அவர் கொலை செய்ததாகவும் ஜப்பான் காவல்துறை தெரிவித்துள்ளது.
தான் வெறுத்த சில அமைப்புகளுடன் ஷின்சோ அபே தொடர்பு வைத்திருக்கலாம் என கருதி அவரை கொலை செய்ததாக யமகாமி வாக்குமூலம் அளித்துள்ளதாக ஜப்பான் காவல்துறை கூறியுள்ளது.