டொரோண்டோ:கனடாவில் தொலை தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் மொபைல் போன், இணையதளம், ‘கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு’ சேவை உள்ளிட்ட தொலை தொடர்பை சார்ந்துள்ள அனைத்து சேவைகளும் முற்றிலும் முடங்கின.
வட அமெரிக்க நாடான கனடாவில் ‘ரோஜார்ஸ், டெலஸ், பெல்’ ஆகிய நிறுவனங்கள் தொலை தொடர்பு சேவைகளை வழங்கி வருகின்றன. இதில் ரோஜார்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். வங்கிகள் நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் இந்நிறுவன தொலை தொடர்பு சேவையை பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4:30 மணிக்கு ரோஜார்ஸ் தொலை தொடர்பு சேவையில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. நீதிமன்றங்களில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலான விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டன. மருத்துவமனைகளிலும் சில சேவைகள் பாதிக்கப்பட்டன. அவசர அழைப்பு எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் ரோஜார்ஸ் நிறுவனத்தின் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் இயல்பு வாழ்க்கையில் இரண்டு நாட்களாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தொழில் நுட்பக் கோளாறை சரிசெய்யும் முயற்சியில் அந்நிறுவன பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் மற்ற இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பாதிப்பு இல்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement