கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இலங்கை காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவந்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகிய இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீதிகளில் இரங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் குதித்தனர்.
இலங்கையில் கடந்த முறை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.
The security forces brutally attack the protesters. Women are also brutally attacked. #Lka pic.twitter.com/AicHqagFUz
— Manjula Basnayake (@BasnayakeM) July 9, 2022
அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க-வை இடைகால பிரதமராக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்தார்.
மகிந்த ராஜபக்ச பதவி விலகியை தொடர்ந்து, பொதுமக்கள் ஓரவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஜுலை 9ம் திகதி சனிக்கிழமையான நேற்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக் குழுவினர், அங்குள்ள நீச்சல்குளம், சமயலறை என அனைத்தையும் ஆக்கிரமித்து கொண்டுள்ளனர்.
மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க-வின் இல்லத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
Thousands of protesters in Sri Lanka stormed President Gotabaya Rajapaksa’s official residence in Colombo, calling for his resignation over the country’s worst economic crisis in seven decades https://t.co/O4HdqdCsGf pic.twitter.com/Snfyi4k9ll
— Reuters (@Reuters) July 9, 2022
இந்தநிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இலங்கை காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதுடன் மட்டுமல்லாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: இங்கிலாந்து அணியை ஓடவிட்டு இந்தியா அபார வெற்றி…தொடரையும் கைப்பற்றி அசத்தல்!
இதில் பெண்கள் மற்றும் செய்தியாளர்களும் பலமாக தாக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதுத் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி போராட்டக்காரர்களை மேலும் சீற்றமடைய வைத்துள்ளது.