மத நம்பிக்கைகளை இழிவுபடுத்த யாருக்கும் உரிமை கிடையாது – வெங்கையா நாயுடு

புதுடெல்லி,

பெங்களூருவில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:- ஒருவர் தான் விரும்பும் மதத்தை கடைபிடிக்கலாம், தனது மதத்தை குறித்து பெருமைப்பட்டு கொள்ளலாம். ஆனால் மற்றவர்களின் மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது.

மதச்சார்பின்மை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவை இந்தியாவின் நெறிமுறைகளின் முக்கிய பகுதியாகும். பன்மைத்துவம் மற்றும் அதன் மதிப்புகள் மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை, நாட்டின் சில பகுதிகளில் நடக்கும் சம்பவங்களால் குறைத்து விட முடியாது.

இந்தியர்கள் அனைத்து துறைகளிலும் தங்களை தலைவர்களாக நிரூபித்து வருவதை பார்க்கும் போது, உலக அரங்கில் இந்தியாவின் எழுச்சி பரவலாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், நாட்டில் பெண்களின் விடுதலைக்கு இடையூறாக உள்ள தடைகளை அகற்ற வேண்டும். பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பை நமது நாகரீக நெறிமுறைகள் ஊக்குவிக்கிறது என்றாலும் பல பகுதிகளில் பெண்கள் இன்னும் தங்கள் முழு திறனை உணரவில்லை. எனவும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அனைத்து துறைகளிலும் தங்களை நிரூபித்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.