அமர்நாத் யாத்திரையில் 250 பக்தர்கள் தவிப்பு; கர்நாடக அரசு உதவி எண்கள் அறிவிப்பு| Dinamalar

பெங்களூரு : அமர்நாத் யாத்திரைக்கு சென்ற கர்நாடகாவின் 250 பக்தர்கள் உதவிக்கு சிக்கி தவிக்கின்றனர். இவர்களில் 15 பேர் மட்டுமே இதுவரை தொடர்புக்கு கிடைத்துள்ளனர். மாநில அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்கும் யாத்திரையை பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மோசமான வானிலையால், மேக வெடிப்பு காரணமாக நேற்று முன்தினம் திடீரென பலத்த மழை கொட்டியது. கோவிலுக்கு அருகே டென்ட்களில் தங்கியிருந்த பக்தர்கள் பலர், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.கர்நாடகா பக்தர்கள் பலர், யாத்திரைக்கு சென்று சிக்கி தவிக்கின்றனர். இவர்களை பத்திரமாக மீட்க, கர்நாடக பேரிடர் மேலாண்மை ஆணைய கமிஷனர் மனோஜ் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு உதவும் வகையில் மாநில அரசு உதவி மையம் திறந்துள்ளது. அமர்நாத் யாத்திரையில் சிக்கி கொண்டிருப்போர், தாங்கள் எங்கு உள்ளனர் என்பதை, தேசிய பேரிடர்பு மீட்பு குழுவை 011 – 2343 8252 / 53 தொலைபேசியிலும்; காஷ்மீர் மண்டல உதவி எண்: 0194 – 2496240 லும்; தேவஸ்தானம் போர்டு உதவி எண்: 0194 – 2313149 லும்; கர்நாடக அவசர உதவி எண்: 080 – 1070, 2234 0676 லும் தொடர்பு கொள்ளலாம்.நேற்றைய நிலவரப்படி 250 பேர் சிக்கியிருப்பதாகவும், இதில் 15 பேர் தங்கள் இருப்பிடத்தை குறிப்பிட்டு உதவி எண்ணை தொடர்பு கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.இது குறித்து, முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூரில் நேற்று கூறுகையில், ”அமர்நாத் யாத்திரைக்கு சென்ற கர்நாடகத்தவர்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனர். அவர்களை பத்திரமாக மீட்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசு, ஜம்மு – காஷ்மீர் அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்,” என்றார்.

வருவாயத்துறை அமைச்சர் அசோக், பெங்களூரில் நேற்று கூறியதாவது:ஜம்மு — காஷ்மீரின், அமர்நாத் யாத்திரைக்கு சென்றவர்கள், அபாயத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை பாதுகாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதே போன்று மாநில அரசும், உதவி எண் துவங்கியுள்ளது. சிக்கபல்லாபூர், பெங்களூரு, ஷிவமொகா, மைசூரு, மாண்டியா, ராம்நகர் என, பல்வேறு இடங்களிலிருந்து, அழைப்பு வருகிறது. அவர்கள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், மானிட்டர் செய்கிறோம். மத்திய அரசுடன் நிரந்தர தொடர்பில் இருக்கிறோம். கன்னட யாத்திரிகர்களை பாதுகாக்க, அரசு முயற்சிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.