இந்தியாவின் மிக சொகுசான 6 ரயில்கள் எது தெரியுமா.. அதன் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ரயில் பயணம் என்றாலே பலருக்கும் விருப்பமான பயணங்களில் ஒன்றாக இருக்கிறது. இது பாதுகாப்பானது என்பதோடு, கட்டணமும் குறைவும் என்பதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற ஒரு போக்குவரத்தாகவும் உள்ளது.

எனினும் இந்திய ரயிலிலும் பிரம்மாண்ட வசதிகள் கொண்ட சொகுசு ரயில்களும் உள்ளன.

இந்தியாவின் நீளமான ரயில் எது தெரியுமா.. எவ்வளவு கட்டணம்?

அந்த ரயில் அப்படி என்ன வசதிகள் உள்ளன? அது எந்தெந்த ரயில்கள்? எவ்வளவு கட்டணம்? மற்ற முக்கிய விவரங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தி ராயல் ஓரியண்ட்

தி ராயல் ஓரியண்ட்

குஜராத்துக்கும் மகாராஷ்டிராவுக்கும் இடையில் பயணிக்கும் இந்த ரயிலானது மேல் தட்டு மக்கள் விரும்பும் சொகுசு ரயிலாக உள்ளது. இது உலகின் சொகுசு ரயில்கள் ஒன்றாக உள்ளது. மொத்தத்தில் இதில் பயணிக்கும் மக்களுக்கு ஒரு மறக்கமுடியா சிறந்த அனுபவமாக இருக்கும். இந்த ரயில் 1994 – 95ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த சொகுசு ரயில் இந்தியாவில் பல்வேறு கலாச்சார உணவுகளை வழங்குகின்றது. இது தவிர சைனீஷ் உணவுகள், வெஜ் மற்றும் நான் வெஜ் என கிடைக்கும்.

இதில் தி வாட்டரிங் ஹோல் என்ற பாரும் உள்ளது. இது தவிர இரண்டு சலூன்கள், டிவி மற்றும் சிடி பிளேயர், மியூசிக் பிளேயர், லைஃப்ரேரி என பல வசதிகள் உள்ளன. ரயிலில் கட்டணம் சுமார் 7,480 ரூபாய் கட்டணம் + 4.5% சேவைக் கட்டணம் என பலவும் அடங்கும்.

 

 தி பேலஸ் ஆன் வீல்ஸ்
 

தி பேலஸ் ஆன் வீல்ஸ்

இந்த சொகுசு ரயில் டெல்லி, ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சால்மர், உதய்ப்பூர், சவாய் மதோபூர், ஆக்ர, ரந்தம்பூர் தேசிய பூங்கா பரத்பூர் பறவைகள் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பயணிக்கும் ஒரு ரயில் ஆகும். அரண்மனை தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த ரயில், மிக ஆடம்பரமான கலாசாரத்தினை கொண்டுள்ளது. இதில் 7 இரவுகள். 8 பகல் பயண நேரம் கொண்டுள்ளது. இந்த ரயில் ஜனவரி 1982ல் தொடங்கப்பட்டது. அதே ஆண்டிலும் செயல்படத் தொடங்கியது.

முழுக்க ஏசி வசதியுடன் 14 சலூன்கள், இதில் பாத் & சவர் வசதியும், இண்டர்காம், மியூசிக், சேட்டிலைட் போன், பேலஸ் போன்ற ராயல் மற்றும் சொகுசு வசதியினையும் கொண்டுள்ளது. இதில் தி மகாராஜா என்ற உணவகமும் உள்ளது. இதில் பல வகையான உணவுகளும், பார் வசதியும், இந்த ரயில் ஷாப்பிங் செய்யவும் வசதிகள் உள்ளது. இது தவிர பல பொழுதுபோக்கு வசதிகளும் உள்ளது.

 

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ், ராஜஸ்தான் வழியாக பயணிக்கும் இந்த ரயில் பல முக்கிய சுற்றுலா தலங்கள் வழியாக பயணிக்கிறது. இது பெயருக்கு ஏற்ப பல்வேறு ஆடம்பர வசதிகளுடன் குடிய மறக்க முடியாத பயண அனுபவத்தை கொடுக்கிறது. இதில் மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் வை பை சேட்டிலைட் போன் வசதியுடன், குளிர்சாதன வசதி, பார் வசதி, ஸ்பா உள்ளிட்ட பல வசதிகளையும் கொண்டுள்ளது. இதுவும் 8 இரவு 7 பகல் பயண நேரத்தினை கொண்டுள்ளது.

இதில் கட்டணம் சிங்கிள் – 865 டாலர் வரையில் (ரூ.51,900 வரை) ஒரு இரவுக்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதே டபுள் எனில் ஒருவருக்கு ஒரு இரவுக்கு 650 டாலர் வரையிலும் (ரூ. ஒருவருக்கு 39,000), இதே சூப்பர் டீலக்ஸ் ஒரு நபருக்கு ஒரு இரவுக்கு 1800 டாலரும் (ரூ.1,08,000) கட்டணமாக உள்ளது.

 

தி மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ்

தி மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ்

இது 4 விதமான பயண அனுபவத்தினை வழங்குகின்றது. இதில் இரண்டு தனித்துவமான உணவகங்கள், உள்ளிட்ட பல வசதிகளை வழங்குகிறது. இது உலகத் தரம் வாய்ந்த பல வசதிகளை பயணிகளுக்கு வழங்குகின்றது. மொத்தல் ராஜ வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ரயில் சிறந்தொரு அனுபவத்தினை கொடுக்கிறது.

இது டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதய்ப்பூர், பாலாசினார், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் பயணிக்கிறது. இதில் பைவ் ஸ்டார் தரத்தில் உணவகங்கள், பார்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், என பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. இந்த ரயில் 4 பகல் /3 இரவு பயணிக்கிறது. இதில் கட்டணமாக 9,83,240 ரூபாய் வரையில் வசூலிக்கப்படுகிறது. இது தவிர ஜிஎஸ்டி உள்ளிட்ட பலவும் சேரும். இது டீலகஸ், ஜூனியர் ஜுட், ஜூட் தனி நபர், பிரெசிடென்ஷியல் ஜுட் என பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் தேர்வு செய்வதற்கேற்பட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

தி டெக்கான் ஓடிஸி

தி டெக்கான் ஓடிஸி

சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பிரபலமான ரயில்களில் ஒன்று தி டெக்கான் ஒடிஸி. இது மும்பை, நாசிக், ஷீரடி, ஆக்ரா, ஜெய்ப்பூர், உதய்ப்பூர், கோஹல்பூர், கோவா, அவுரங்கபாத், ஹைதராபாத் வழியாக பயணிக்கிறது. இது மொத்தம் 21 பெட்டிகளை கொண்டுள்ளது. இதிலும் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் இருக்கும் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. இதில் கட்டணமாக டீலக்ஸ் கேபின்களுக்கு 6,76,200 ரூபாய் வரையிலும், இதே பிரெசிடெல்ஷியல் கேபினுக்கு 10,20,880 ரூபாய் வரையிலும், குழந்தைகளுக்கு இருவருக்கு 5,07,360 ரூபாய் வரையில் கட்டணமாக உள்ளது.

தி கோல்டன் சாரியட்

தி கோல்டன் சாரியட்

சொகுசு ரயிலான தி கோல்டன் சாரியட் 19 பெட்டிகளை கொண்டுள்ளது. இது 6 இரவு, 7 பகல் பயணிக்கிறது. இது மைசூர், ஸ்ரீரங்கபட்னா, ஹம்ப, பந்திபூர், பெங்களூர் வழியாக கோவா வரையில் பயணிக்கும் ஒரு ரயில் ஆகும். இது கடந்த மார்ச் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சொகுசு ரயிலும் பல்வேறு வசதிகள் உள்ளன. ஆடம்பர உணவகம், ஜிம் என பல வசதிகள் உள்ளன. இதில் கட்டணமாக டீலக்ஸ்-ல் 182930 ரூபாய் வரையிலும், இதே தனி நபர்களுக்கு 1,37,200 ரூபாயும் உள்ளது.

எனினும் மேற்கண்ட கட்டணங்கள் அனைத்தும் பழைய கட்டண விகிதங்கள் ஆகும். இந்த கட்டணங்களோடு ஜிஎஸ்டி வரும். அதோடு கட்டணங்களும் தற்போது மாறுபடலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

six of india’s Most Luxurious Train Journeys: check details

six of india’s Most Luxurious Train Journeys: check details/இந்தியாவின் மிக சொகுசான 6 ரயில்கள் எது தெரியுமா.. அதன் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Story first published: Sunday, July 10, 2022, 11:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.