இலங்கை ஜனாதிபதி கோட்டாபய மகன் மனோஜ் அமெரிக்காவில் வசிக்கும் நிலையில் அவர் வீட்டுக்கு எதிரில் இலங்கையர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13 ஆம் திகதி கட்டாயம் பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்து இவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவில் வீடுகளை கொள்வனவு செய்ய எப்படி பணம் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கையர்கள் என்ற வகையில் அந்த பணத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.