நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இந்திய பங்கு சந்தையில் பலமான ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன. இந்த ஏற்ற இறக்கத்தின் மத்தியில் கூட பல நல்ல பங்குகள் கூட சரிவினைக் கண்டுள்ளன.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா ஸ்டீல் பங்கினைப் பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
தங்கம் விலை இன்னும் குறையலாம்.. வாங்க தயாரா இருங்க.. நிபுணரின் பலே கணிப்பு..!

டாடா ஸ்டீல் சரிவு
டாடா ஸ்டீல் பங்கு விலையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இப்பங்கின் விலையானது 1142 – 885 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. சுமார் 22% சரிவினைக் கண்டுள்ளது. லை
இப்பங்கின் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று 885.25 ரூபாயாக முடிவடைந்தது.

இலக்கு விலை
இது 1.64% சரிவினைக் கண்டுள்ளது. இப்பங்கினை வாங்கலாம் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது. இதன் இலக்கு விலை 1045 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதனை 875 – 895 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம் என கணித்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் – 799 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது 3 மாதத்தில் எட்டலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த சரிவு
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் படி, நிஃப்டி மே மாத தொடக்கத்தில் இருந்து சந்தைகள் பலத்த ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன. உலக பொருளாதாரத்தின் மந்த நிலைக்கு மத்தியில், உலோக பங்குகள் விலை பலத்த சரிவில் காணப்படுகின்றன. இதில் டாடா ஸ்டீல் பங்கு விலையானது பலத்த சரிவினைக் கண்டுள்ளது.

அதிகரிக்கலாம்
குறிப்பாக சமீபத்திய உச்சத்தில் இருந்து 45% சரிவில் காணப்பப்டுகிறது. எனினும் வரவிருக்கும் நாட்களில் இப்பங்கின் விலையானது ஏற்றத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகாலத்திற்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பங்கின் விலையானது தொடர்ந்து 900 ரூபாயாக வர்த்தகமானால், மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய லெவல்
அதேபோல கீழாகவும் அதிகளவில் குறையாது என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சப்போர்ட் லெவல் 840 – 850 ரூபாயாக கணித்துள்ளது. ஆக இந்த லெவகளில் ஏதேனும் ஒரு லெவலை உடைக்கும்பட்சத்தில் இப்பங்கினில் நல்ல மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே இப்பங்கின் விலையானது 900 ரூபாய் என்ற லெவலியே காணப்படுகின்றது.

வளர்ச்சி அதிகரிக்கலாம்
டாடா ஸ்டீல் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல வளர்ச்சியினை காட்டி வரும் நிலையில், சி ஏ ஜி ஆர் விகிதமானது 76 சதவீதத்திற்கு மேலாக காணப்படுகின்றது. இதன் வளர்ச்சி விகிதம் வரவிருக்கும் மாதங்களில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பங்கு விலையும் அதிகரிக்க காரணமாக அமையலாம்.
Experts predict that Tata Group will buy this share
Experts predict that Tata Group will buy this share/டாடா குழுமத்தின் இந்த பங்கினை வாங்கி போடுங்க.. 3 மாதத்தில் நல்ல லாபம் கிடைக்கும்?