கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது கவுதம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெந்து தணிந்தது காடு படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இத்னானி நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
‘வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ்’ சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.