Ttd: பிரம்மோற்சவ பெருவிழா… திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!

திருப்பதியில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் உவக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு பிரம்மோற்சவம் செப்டம்பர் 27 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மாண்டமான இந்த பிரம்மோற்சவ திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வும் செப்டம்ப்ர 27 ஆம் தேதி மாலையே நடைபெற உள்ளது.

கொடியேற்ற நிகழ்வின் முக்கிய அம்சமாக, ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் வழங்க உள்ளார்.

பிரம்மோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக அக்டோபர் 1 ஆம்தேதி கருட வாகனம், 2 ஆம் தேதி தங்க ரதம், 4 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

மற்றொரு முக்கிய அம்சமாக, பிரம்மோற்சவ விழாவையொட்டி இரண்டு ஆண்டுக்கு பிறகு மாடவீதியில் ஏழுமலையான் வீதி உலா நடைபெற உள்ளது. கொரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வீதி உலா ரத்து செய்யப்பட்டிருந்தது.

இதேபோன்று, கொரோனாவால் கைவிடப்பட்டிருந்த அகண்ட ஹரிநாம சங்கீர்த்தன நிகழ்ச்சியும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது என்று திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த தகவலால் திருமலை திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.