வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இலங்கைக்கு இதுவரை இந்தியா 3.8 பில்லியன் டாலர் கடனுதவி வழங்கி உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: இலங்கை மற்றும் அந்நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை பற்றி நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். இந்த கடினமான சூழலை, இலங்கை மக்கள் கடந்து வர இந்தியா துணை நிற்கும். அந்நாட்டின் தற்போதைய சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையில் இலங்கைக்கு முக்கிய இடம் உள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இதுவரை 3.6 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக வழிமுறைகள் மூலம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான தன்வைக்க முயற்சி செய்யும் இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.
உதவி தொடரும்
முன்னதாக திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், இலங்கைக்கு இதுவரை இந்தியா உதவியுள்ளது. தற்போதும் உதவி செய்கிறோம். எதிர்வரும் காலங்களிலும் உதவி செய்வோம். பிரச்னைகளில் இருந்து மீள்வதற்கு இலங்கை அரசு முயற்சி செய்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது அகதிகள் பிரச்னை ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement