கர்நாடகா: கர்நாடகாவில் கனமழையால் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடகு, தக்சின கன்னடா, கார்வார், சிக்கமங்களூரு, பெலகாவி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கபினி, கே.எஸ்.ஆர். அணைகளில் இருந்து சுமார் 50,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் பல இடங்களில் நீர் சூழ்ந்துள்ளது.
