புதுடெல்லி: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகையானது இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலையிலேயே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. பக்ரீத் என்பது உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். ரம்ஜான் கொண்டாட்டம் முடிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு 4 நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும். தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த கொண்டாட்டம், சுல் ஹிஜ்ரா என்ற அரேபிய மாதத்தின் பத்தாவது நாள் கொண்டாடப்படுகிறது. ‘ஈத் அல்-அதா’ என்றும், தியாக திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமிய மக்கள் ஈடுபட்டனர். இதையொட்டி அதிகாலையிலேயே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெறும் நிலையில், இந்தியாவில் இஸ்லாமியர்கள் புதிய ஆடைகளை அணிந்து, திறந்த வெளியில் நடந்த தொழுகை கூட்டங்களில் பங்கேற்கின்றனர். தலைநகர் டெல்லி உட்பட முக்கிய நகரங்களில் நடந்த தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பக்ரீத் கொண்டாட்டங்களை முன்னிட்டு தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.