இலங்கையில் ஜனாதிபதி மாளிகைக்குள் தனியாக சிக்கிக்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை இலங்கை பாதுகாப்பு படையினர் கொடூரமாகவும் தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று பெருந்திரளான மக்கள் ஒன்று சேர்ந்து அதிபர் மாளிகைக்குள் மற்றும் வீட்டிற்கு நுழைய முற்ப்பட்டனர்.
அப்போது, அதிபர் மாளிகைக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய நிலையிலும், போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் பல தடைகளை தாண்டி நுழைந்தனர். மேலும் பழைய நாடாளுமன்ற கட்டடத்தை கைப்பற்றினர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக் குழுவினர், அங்குள்ள நீச்சல்குளம், சமயலறை என அனைத்தையும் ஆக்கிரமித்தனர். அதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாயின.
மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க-வின் இல்லத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமையன்று) ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், இலங்கை பாதுகாப்புப் படையினர் தங்களிடம் தனியாக சிக்கிக்கொண்ட சில ஆர்ப்பாட்டக்காரர்களை கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
— Ruzny Ali Uthuman (@ruznyali) July 10, 2022