போராட்டத்திற்கு மத்தியில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற சொகுசு கார்கள்! பயணம் செய்தவர் தொடர்பான தகவல் வெளியானது


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அராசாங்கத்திற்கு எதிராக நேற்றைய தினம் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு இடையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி சொகுசு கார்கள் பல சென்றிருந்தமை தொடர்பில் தகவல் வெளியாகியிருந்தது. 

குறித்த வாகனங்களில் பயணம் செய்தவர்கள் தொடர்பில் தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  

அந்த வாகனங்களில் நாட்டை விட்டு முக்கிய பிரபுக்கள் சிலர் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் அந்த செய்திகள் பொய்யானவை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்களில் பயணம் செய்தவர் யார்..?

போராட்டத்திற்கு மத்தியில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற சொகுசு கார்கள்! பயணம் செய்தவர் தொடர்பான தகவல் வெளியானது | Luxury Cars That Went To Katunayake Airport

இதன்போது, இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தனது விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி வந்திருந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அவருடன் செல்வதற்காக பல வாகனங்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் வந்ததாகவும் அதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.