தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காதில் ரகசியமாய் சொல்வதைக் கேட்டு, அமைச்சர் பொன்முடி விழுந்து, விழுந்து ஒரே அடியாக சிரிப்பாய் சிரித்த காணொளி, தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அரசு நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஒன்றாக அருகருகே அமர்ந்து இருக்கும் காணொளி ஒன்றை, பொன்மொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தலைவர் என்று தலைப்பிட்டுள்ள அந்த காணொளியில், முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் பொன்முடியின் காதில் ஏதோ ஒரு ரகசியத்தை கூறுகிறார். கூறியவுடன் அதைக் கேட்ட அமைச்சர் பொன்முடி, விழுந்து விழுந்து சிரிக்கிறார்.
தலைவர்… pic.twitter.com/fqDzgovvdm
— Dr.K.Ponmudy (@KPonmudiMLA) July 9, 2022
அதேபோல முதல்வர் ஸ்டாலினும் வாயை கைக்குட்டையால் மூடிக்கொண்டு புன்னகைக்கிறார். தொடர்ந்து முதல்வர் அவருடைய தனி உதவியாளரை அழைத்து ஏதோ தெரிவிக்கிறார். அப்போது அமைச்சர் பொன்முடி, முதல்வர் ஸ்டாலின், தனி உதவியாளர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மீண்டும் சிரிக்கின்றனர்.
எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த சிரிப்பு மயம் கொண்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அப்படி என்னதான் முதல்வர் சொல்லி இருப்பார்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.