ukraine russia latest news: குடியிருப்புகளை குறிவைத்து தாக்குதல்.. ரஷியாவின் அத்துமீறலுக்கு 15 அப்பாவிகள் பலி!

உக்ரைன் -ரஷியா இடையேயான போர் ஐந்தாவது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இநத போரினால் இருதரப்பின் உயிர், பொருட்சேதங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தாலும், போரை கைவிட இரண்டு நாடுகளும் தயாராக இல்லை. ரஷியாவுக்கு உக்ரைன் தக்க பதிலடி கொடுத்து வந்தாலும், பெரும்பாலான நாட்களில் போரின்போது ரஷியாவின் கைகளே ஓங்கி உள்ளது.

இந்த நிலையில், உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு hகுதிகளில் ரஷிய படைகள் இன்று வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்டன. 25-க்கும் மேற்பட்ட பீரங்கி, மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் எல்லையை நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வருகின்றன எனவும் கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்திய நிர்வாகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதனிடையே, கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் நகரின் குடியிருப்பு பகுதி மீது ரஷிய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று பலத்த சேதமடைந்தது.

பாரில் நள்ளிரவு நிகழ்ந்த கொடூர சம்பவம்… நாட்டு மக்கள் அதிர்ச்சி!

இந்த தாக்குதலின் விளைவாக கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 25-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் உக்ரைன் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.