நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாயார் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தெப்பகாடு தற்காலிகப் பாலத்தை சூழ்ந்த தண்ணீரை வனத்துறையினர் வெளியேற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
தொடர் மழையால் மாயார், பாண்டியாறு, பொன்னம்புழ ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மாயார் ஆற்றில் பாயும் தண்ணீரால் தெப்பக்காடு – மசினகுடி நெடுஞ்சாலையை இணைக்கும் தற்காலிக பாலம் துண்டிக்கப்பட்டது.
அங்கு விரைந்த வனத்துறையினர், ராட்சத பைப்புகளில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.