சுதந்திர போராட்டத்தில், நேரடியாக பங்கேற்ற மடங்களில், இன்டியின் இஞ்சிகேரி மடம் முக்கியமானது. ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக இருந்தது.இந்திய சுதந்திர போராட்டத்தில், நேரடியாக பங்கேற்றிருந்த மடங்களில், விஜயபுரா இன்டியின், இஞ்சிகேரி மடமும் ஒன்றாகும். கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா எல்லைப்பகுதியில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக இம்மடம் போர்க்கொடி துாக்கியது.
மடாதிபதி மாதவானந்த பிரபு, தன் ஆயிரக்கணக்கான விசுவாசிகளை சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக, ஆவேசமாக போராடினார்.எப்படியாவது ஆங்கிலேயரை நாட்டை விட்டு விரட்ட, 1929ல் அரும்பு மீசை இளைஞராக இருந்த மாதவானந்தா முடிவு செய்தார். தன் விசுவாசிகளுடன் கூடி, ஹுலகோட், சாவளகி, இஞ்சிகேரி போலீஸ் நிலையங்களை முற்றுகையிட்டு, ஆயுதங்களை சூறையாடினார். பெரும்பாலான தபால் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களுக்கு தீ வைத்தார்.ரயில் தண்டவாளங்களை தகர்த்தார். போலீஸ் நிலையங்களை துவம்சம் செய்து, ஆங்கிலேயர்களை நடுநடுங்க வைத்தார். மாதவானந்தா தலைமையிலான போராளிகள், ஆங்கிலேய அரசுக்கு சொந்தமான கருவூலத்தை கொள்ளையடித்தனர்.
இதனால் அவர் கைதாகி, 27 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். அவரை சில காலம் மும்பையின் யரவாடா சிறையில் இருந்தார்.பெலகாவி அதானியின், கொட்டிலகி, மஹாராஷ்டிரா ஜத் தாலுகாவின், சோன்யாளாவில், இரண்டு துப்பாக்கி தொழிற்சாலை துவங்கி, ஆயுத பலத்துடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார். இவருடன் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், போராட்டத்தில் குதித்தனர்.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தியுடன், மாதவானந்த பிரபு, நேரடி தொடர்பில் இருந்தார்.
இவரது மாறுபட்ட போராட்டத்தை கண்டு, வெலவெலத்த ஆங்கிலேய அரசு, அவரை கண்ட இடத்தில் சுட்டுக்கொல்லும்படி, 1938ல் உத்தரவு பிறப்பித்தது.சுதந்திர போராட்டத்துக்காக, மடத்தின் பக்தர்களை ஒன்று திரட்ட, தன் வாகனத்தில் புறப்பட்டார். கோகாக் அருகில் ஆங்கிலேய போலீசார், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் சுட்ட இடத்துக்கு சென்று பார்த்த போது, அவரை காணவில்லை. அவர் கோகாக் அருகில், கிராமம் ஒன்றில் நடந்தரகசிய கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.’மாதவானந்த பிரபு, பெரிய மகான். அவர் அற்புத சக்தி கொண்டவர்’ என, பக்தர்கள் கொண்டாடினர். இந்த அதிசய சம்பவத்துக்கு பின், ஆங்கிலேய போலீசார், மாதவானந்தரை சுட முற்படவில்லை.
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement