சண்டிமல் அபார சதம் விளாசல்! இலங்கை 400 ஓட்டங்கள் குவிப்பு


காலே டெஸ்டில் இலங்கை வீரர் தினேஷ் சண்டிமல் 13வது சதத்தினை பதிவு செய்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இலங்கை அணி 400 ஓட்டங்களை கடந்து விளையாடி வருகிறது.

கேப்டன் கருணரத்னே, குசால் மெண்டிஸ் ஆகியோர் சதத்தை தவறவிட்ட நிலையில், மற்றோரு துடுப்பாட்ட வீரரான தினேஷ் சண்டிமல் சதம் விளாசியுள்ளார்.

இது அவருக்கு 13வது டெஸ்ட் சதம் ஆகும். அவர் 203 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

Dinesh Chandimal

PC: Twitter

சண்டிமல் 68 டெஸ்ட் போட்டிகளில் 4562 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 13 சதம், 21 அரை சதம் அடங்கும்.

இலங்கை அணி தற்போது 6 விக்கெட் இழப்புக்கு 410 ஓட்டங்கள் எடுத்துள்ளது.  

Dinesh Chandimal

PC: Twitter/@ICC



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.