சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதம் விளாசிய அயர்லாந்து இளம் வீரர்


நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அயர்லாந்து வீரர் டெக்டர் முதல் சதம் அடித்தார்.

நியூசிலாந்து-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டப்லினில் நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய மெக்பிரின் 39 ஓட்டங்கள் எடுத்தார்.

அவர் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இளம் வீரர் ஹேரி டெக்டர் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய அவர், சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் சதத்தினை பதிவு செய்தார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய டெக்டர் 117 பந்துகளில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 113 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Harry Tector

PC: Twitter

அவரது ஆட்டத்தினால் அயர்லாந்து அணி 250 ஓட்டங்களை கடந்தது.

21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டெக்டர் ஒரு சதம், 7 அரை சதங்களுடன் 783 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.