அபுதாபியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இந்த முறை பம்பர் வெல்வார் என்ற நம்பிக்கையில் லொட்டரி சீட்டு வாங்கிய நிலையில், அவர் நினைத்தது அப்படியே நடந்துவிட்டது.
பிக் டிக்கெட் லக்கி டிராவில் அபுதாபி பிரஜை ஒருவர் இந்திய பண மதிப்பில் ரூ.32 கோடி மதிப்பிலான லொட்டரியை வென்றுள்ளார். முதல் இடத்தைப் பிடித்ததற்காக, அவருக்கு 15 மில்லியன் திர்ஹாம்ஸ் பரிசு வழங்கப்படும், இது இந்திய மதிப்பில் ரூ. 32.26 கோடியாகும் (இலங்கை பண மதிப்பில் ரூ.148 கொடியாகும்).
St Kitts and Nevis-ல் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சஃப்வான் அப்துல்காதர் நஜ்மதின் (Safwan Abdulkader Najmedin) என்பவர் தொடர்ந்து இரண்டு வருடங்களாக அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில், 011830 என்ற எண்ணில் அவர் கடைசியாக அதிர்ஷ்டக் குலுக்கல்க்கான லொட்டரி சீட்டை வாங்கினார். அதுமட்டுமின்றி, இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், முதல் இடம் தனக்கே வரும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில், பிக் டிக்கெட்ஸ் பிரதிநிதிகள் அவரைத் தொடர்பு கொண்டபோது, “நீங்கள் நம்புங்கள் அல்லது நம்பாதீர்கள், இன்று உங்கள் அழைப்பை எதிர்பார்த்தேன், தொலைபேசி ஒலித்தது, நான் வெற்றி பெற்றேன் என்று எனக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார்.
அவர் நினைத்தது போல், நம்பியது போல் அவர் முத்லிடத்தைப் பிடித்து 15 மில்லியன் திர்ஹாம்ஸ் வென்றார்.
“நான் மிகவும் சவுகரியமாக உணர்ந்தேன். இந்த பணத்தை எனது மூன்று அழகான குழந்தைகளுக்காக செலவழித்து அவர்களின் எதிர்காலத்திற்காக செலவிடுவேன்” என்று நஜ்மதின் கூறினார்.
இந்த இந்தியர்களும் லாட்டரியை வென்றனர்
இவர்களைத் தவிர, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் லாட்டரி வாங்கிய இந்தியக் குடிமக்கள் ஏராளம். இந்திய வம்சாவளி பிரஜையான கோம்ஸ் பிரான்சிஸ் போனிஃபேஸ், 277709 என்ற அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டை வாங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்து 1 மில்லியன் திர்ஹாம்களை வென்றார்.
மேலும், 223246 என்ற டிக்கெட் எண்ணைக் கொண்ட முகமது அஷ்ரஃப் ஒரு லட்சம் திர்ஹாம்களை வென்றார். மற்றொரு இந்தியரான சோனு மேத்யூ 50 ஆயிரம் திர்ஹாம்களை வென்றுள்ளார், அவரது டிக்கெட் எண் 258613.