இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் 65 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தின் முதலாவது தொகுதியை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (10) காலை இடம்பெற்றது.
44 ஆயிரம் மெட்ரிக் தொன் உரம் இதில் அடங்கியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த உரத்தை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
உரத்தை இறக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு கடந்த காலங்களில் தாம் தீர்வைக் கண்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
4 பில்லியன் ரூபா பெறுமதியான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.