முதியோர் மருத்துவமனையில் டாங்கி தாக்குதல்: குற்றத்தை மறைக்க ரஷ்ய வீரர்கள் செய்த அவலமான செயல்



உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ரஷ்ய ராணுவம் நடத்திய டாங்கி தாக்குதலில் 56 பேர் வரை கொல்லப்பட்டதாக அந்த பகுதியின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர், Serhiy Hayday தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 140 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றும் நோக்கில் தற்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், லுஹான்ஸ்க்கின் கிரெமென்னாயா பகுதியில் உள்ள மருத்துவமனையில் முதியோர்களை குறிவைத்து ரஷ்ய படைகள் டாங்கி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 56 பேர் வரை கொல்லப்பட்டதாக லுஹான்ஸ்க் பகுதியின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர், Serhiy Hayday தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: இலங்கை ஜனாதிபதியிடம் போராட்டக்காரர்கள் கிண்டலாக மூன்வைத்த கேள்வி? வைரலான ஸ்கிரீன்ஷாட் புகைப்படம்

மேலும் ரஷ்ய படைகள் தங்களது தவறுகளை மறைப்பதற்காக கொல்லப்பட்ட பொதுமக்களின் பெரும்பாலான உடலை புதைத்துவிட்டு சென்றுள்ளார்கள் எனவும் Serhiy Hayday குற்றம்சாட்டியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.