மீண்டும் மோசமாக LBW அவுட் ஆன தினேஷ் கார்த்திக்! விமர்சித்த ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ



இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் LBW முறையில் அவுட்டான வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருந்த போதிலும் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

போட்டியின் முக்கியமான கட்டத்தில் விளையாட வந்த இந்திய நம்பிக்கை நட்சத்திரம் தினேஷ் கார்த்திக் ஒரு மிரட்டலான பவுண்டரியை அடித்தார்.
ஆனால் பின்னர் வில்லே பந்துவீச்சில் பந்து அவர் பேடில் பட்டதையடுத்து அவர் LBW அவுட் கேட்டார்.

ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை, இதையடுத்து ரிவ்யூ கேட்கப்பட்டது.
அதில் தினேஷ் கார்த்திக் அவுட் என சொல்லப்பட்டது, இதையடுத்து ஏமாற்றத்துடன் அவர் வெளியேறினார்.

இந்த தொடரில் ரன்களை குவிக்காமல் தினேஷ் கார்த்திக் மோசமாக தடுமாறிய நிலையில் ரசிகர்களை அவர் பேட்டிங்கை கடுமையாக சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.