மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்த சுவிஸ் கிராமம் ஒன்றிற்கு எதிர்பாராத அபாயம் ஒன்று உருவாகியுள்ளது.
சுவிஸ் கிராமமான Kanderstegதான் தற்போது நிலவியல் நிபுணர்களின் கவனத்துக்கு வந்துள்ள கிராமம் ஆகும்.
விடயம் என்னவென்றால், இம்மாதம் (ஜூலை) 2ஆம் திகதி, இத்தாலிப் பகுதியில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலையில் மலைச்சரிவு ஏற்பட்டதில், பாறைகள் பெயர்ந்து விழுந்து பத்து பேர் வரை கொல்லப்பட்டார்கள்.
அதைத் தொடர்ந்து நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், இத்தாலியைப் போலவே சுவிஸ் கிராம் ஒன்றில் அருகில் அமைந்திருக்கும் மலைப்பகுதியிலும் மலைச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதை அவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
ஆகவே, அந்த மலைப்பகுதியில் அவர்கள் பல சென்சார்களை பொருத்தியுள்ளார்கள். அதாவது, அந்த மலைப்பகுதியில் உள்ள பாறைகள் பெயர்ந்து வருமானால், அவை விழுவதற்கு 48 மணி நேரம் முன்பே இந்த சென்சார்கள் எச்சரிக்கை கொடுக்கும். உடனடியாக Kandersteg கிராமத்தில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிடலாம் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இப்படி திடீர் திடீரென மலைச்சரிவு ஏற்படுவதற்குக் காரணம், புவி வெப்பமயமாதல்…
சுற்றுச்சூழலியல் நிபுணர்கள் காலம் காலமாக எச்சரித்தும் அவர்கள் எச்சரிக்கைகளை சட்டை செய்யாத மனித இனம், கொஞ்சம் கொஞ்சமாக அதன் பலனை அனுபவிக்கத் துவங்கியுள்ளது என்றே தோன்றுகிறது!