இலங்கை ஜனாதிபதி மாளிகையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் நாற்காலியில் அமர்ந்து மகிழ்ந்த வீடியோவை இலங்கை முன்னாள் வீரர் ரசுல் அர்னால்டு சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மாளிகைக்கு நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு சேட்டைகளை செய்து வருகின்றனர்.
ஜனாதிபதியின் இல்லத்தில் படுக்கை அறை வரை நுழைந்து பலர் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் ஜனாதிபதி கோட்டாபாயவின் சமூக வலைதள பக்கத்தில், வீட்டில் சின்ன பின் சார்ஜர் இல்லையா? என கேள்வி எழுப்பிய பதிவு இணையத்தில் வைரலானது.
அந்த வகையில், தற்போது இளைஞர்கள் சிலர் ஜனாதிபதி நாற்காலியில் மாறி மாறி அமர்ந்து, தங்களை ஜனாதிபதியாக நினைத்து மகிழ்ந்த வீடியோவை அஸாம் அமீன் வெளியிட்டுள்ளார்.
Sorry but these guys are funny 😂😂 https://t.co/x707vpdcYX
— Russel Arnold (@RusselArnold69) July 11, 2022
இந்த வீடியோவை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரசுல் அர்னால்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன், மன்னித்து விடுங்கள், இவர்கள் செய்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது என சிரிக்கும் எமோஜியுடன் குறிப்பிட்டுள்ளார்.