தாலிபான்களுக்கு உதவும் ஐக்கிய அரபு நாடுகள்.. எதற்காகத் தெரியுமா..?

ஆப்கானிஸ்தான் நாட்டைப் பல வருட போராட்டத்திற்குப் பின்பு தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு சந்தை என அனைத்தும் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.

குறிப்பாகப் பெண்களுக்குத் தாலிபான்கள் அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர், இதில் அதி முக்கியமான பெண்களுக்கான கல்வி உரிமை அதிகளவில் மறுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளையில் தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் சில முக்கியமான முடிவுகளையும் எடுத்துள்ளது.

மும்பை நபருக்கு மறுக்கப்பட்ட ரூ.3.50 கோடி காப்பீடு.. இனி காப்பீடு எடுப்பது எளிதில்லையா?

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் வேளையில் பசி மற்றும் வறுமையில் மக்கள் தவித்து வரும் வேளையில் உலக நாடுகளிடம் இருந்து ஒதுங்கி இருக்கக் கூடாது என்பதற்காக ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தை இயக்க முடிவு செய்துள்ளது.

தாலிபான்கள்

தாலிபான்கள்

ஆகஸ்ட் 2021ல் ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானைத் தாலிபான்களைக் கைப்பற்றிய நிலையில், அன்று முதல் ஆப்கானிஸ்தான் விமான நிலையங்களை இயக்கப்படாமல் தரை தட்டி நிற்கிறது.

விமான நிலையங்கள்

விமான நிலையங்கள்

இந்நிலையில் தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் விமான நிலையத்தை இயங்க ஐக்கிய அரபு நாடுகள், துருக்கி, கத்தார் ஆகிய நாடுகளின் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

விரைவில் ஒப்பந்தம்
 

விரைவில் ஒப்பந்தம்

தற்போது தாலிபான்கள் ஐக்கிய அரபு நாட்டின் அரசின் உதவியுடன் விமான நிலையங்களை இயக்குவது என முடிவு செய்து அதற்கான ஒப்பந்தம் விதிமுறைகளைத் தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளதாகவும் அடுத்த சில வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 விமான நிலையம்

5 விமான நிலையம்

டிசம்பர் 2021ல் கத்தார் நிறுவனத்துடன் தாலிபான்கள் அரசு ஆப்கானிஸ்தானில் இருக்கும் காபூல், பல்க், ஹெராத், காந்தஹார் மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் உள்ள விமான நிலையங்கள் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஐக்கிய அரபு நாடுகள்

ஐக்கிய அரபு நாடுகள்

ஆனால் ஆப்கானிஸ்தான் பொருளாதாரச் சூழ்நிலை ஒத்துவராத காரணத்தால் இந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு நாடுகளின் அரசின் ஒப்புதல் உடன் அந்நாட்டு நிறுவனங்கள் ஆப்கானிஸ்தான் விமான நிலையங்களை இயக்க முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

UAE helping to run Taliban controlled Kabul airport

UAE helping to run Taliban controlled Kabul airport தாலிபான்களுக்கு உதவும் ஐக்கிய அரபு நாடுகள்.. எதற்காகத் தெரியுமா..?

Story first published: Monday, July 11, 2022, 14:02 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.