Amazon is the foremost choice of consumers when it comes to online TV purchases, and scores highest among online e-commerce portals when it comes to brand trust (71%), convenience (67%) and value (65%) Tamil News: பெரும்பாலான இந்தியர்கள் இந்த நாட்களில் ஆன்லைனில் தொலைக்காட்சிப் பெட்டிகளை (டிவி) வாங்க விரும்புகிறார்கள் என்றும், ஆஃப்லைனில் வாங்க முயலும் ஐந்தில் மூன்று பேர் டிவி வாங்குவதை ஆன்லைனில் தேடுவதில் ஆர்வமாக உள்ளனர் என்றும் சைபர் மீடியா ரிசர்ச் (சிஎம்ஆர்) வெளியிட்டுள்ள புதிய ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் வாங்குபவர்களில், அமேசானை (Amazon) தங்களின் மிகவும் விருப்பமான ஆன்லைன் தளம் என்கிறார்கள். அதே நேரத்தில் ஆஃப்லைன் வாங்குபவர்களுக்கு குரோமா (Croma) விருப்பமான இடமாக உள்ளது என்றும் சிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
டயர் 1 மற்றும் டயர் 2 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், வீட்டு டெலிவரியின் எளிமை, தேர்வுகளின் வரம்பு மற்றும் மலிவு கட்டணச் சலுகைகள் ஆகியவை ஆன்லைன் டிவி வாங்குதல்களை பாதிக்கும் முக்கிய காரணிகள் என்பதைக் காட்டுகிறது. கொரோனா தொற்றுநோய்க்குப் பிந்தைய இந்தியாவில் அதிகமான நுகர்வோர் தங்களின் அடுத்த டிவியை ஆன்லைனில் வாங்க விரும்புகிறார்கள். இது கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்த டிஜிட்டல் முறை மாற்றத்திற்கு காரணம் என்று ஆய்வு கூறுகிறது.
“வீட்டு பொழுதுபோக்கு என்பது புதிய இயல்பில் முற்றிலும் புதிய அர்த்தத்தை எடுத்துள்ளது. இந்தியர்கள் பொதுவாக சராசரியாக எட்டு வருடங்கள் தங்கள் டிவியை வைத்திருக்கிறார்கள். அதே வேளையில், அதிகமான நுகர்வோர் இப்போது தங்கள் பொழுதுபோக்கு அனுபவங்களை சமீபத்திய டிவி மூலம் மேம்படுத்த முயல்கின்றனர்” என்று சைபர் மீடியா ரிசர்ச் (CMR) இன் இண்டஸ்ட்ரி கன்சல்டிங் குரூப் (IIG) தலைவர் சத்யா மொஹந்தி கூறியுள்ளார்.
தொலைக்காட்சிகளில் இணைய இணைப்பு ஒரு முக்கிய கொள்முதல் இயக்கியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்லைன் டிவி வாங்குதல்களுக்கு வரும்போது நுகர்வோரின் முதன்மையான தேர்வாக அமேசான் உள்ளது. மேலும் பிராண்ட் நம்பிக்கை (71%), வசதி (67%) மற்றும் மதிப்பு (65%) என வரும்போது ஆன்லைன் ஈ-காமர்ஸ் போர்டல்களில் அதிக ஸ்கோரை அமேசான் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் ஆஃப்லைன் சில்லறை விற்பனையில் குரோமா முன்னணியில் உள்ளது. சுவாரஸ்யமாக, ஒவ்வொரு ஐந்தில் மூன்று ஆஃப்லைன் டிவி வாங்குபவர்களும் ஆன்லைனில் அடுத்த டிவி வாங்குவதை ஆராய்ந்து வருகின்றனர் என்று ஆய்வு கூறுகிறது.
“இணையத்தில் பிறந்த தலைமுறைக்கு அப்பால், எங்கள் ஆய்வு முடிவுகள் பாரம்பரிய ஆஃப்லைன் நுகர்வோரின் மனநிலையில் ஒரு மாற்றத்தை சுட்டிக்காட்டுகின்றன. அவர்களின் கொள்முதல் பயணத்தில் தொடுதல் மற்றும் உணருதல் ஒரு முக்கிய பகுதியாக இருந்தாலும், அவர்கள் இப்போது ஆன்லைனில் டிவி வாங்குவதை ஆராய்வதற்கு மிகவும் திறந்திருக்கிறார்கள்” என்று சைபர் மீடியா ரிசர்ச் (சிஎம்ஆர்) இன் இண்டஸ்ட்ரி இன்டலிஜென்ஸ் குரூப் (ஐஐஜி) தலைவர் பிரபு ராம் கூறியுள்ளார்.
ஒவ்வொரு 11 பயனர்களிலும் ஐந்து பேர் பழைய, வழக்கமான டிவியில் இருந்து ஸ்மார்ட் டிவிக்கு மேம்படுத்துவதற்காக புதிய டிவியை வாங்கியுள்ளனர் அல்லது வாங்க திட்டமிட்டுள்ளனர் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
முதல் மூன்று விழிப்புணர்வு ஆதாரங்கள் மற்றும் டிவி வாங்குவதில் முக்கிய செல்வாக்கு செலுத்துபவர்களில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் (65%), ஆன்லைன் போர்ட்டல்கள் (59%) மற்றும் சமூக ஊடகங்கள் (46%) ஆகியவை அடங்கும். புதிய டிவிகளில் அழகியலை வடிவமைக்கும் போது, திரை அளவு (75%), மெலிதான சட்டகம் (69%) மற்றும் மேம்பட்ட வடிவமைப்பு (66%) ஆகியவை பயனர்களின் கருத்தில் முதலிடம் வகிக்கின்றன.
ஆன்லைன் நுகர்வோர் மத்தியில், வீட்டு வாசல் டெலிவரி (60%) என்பது ஆன்லைனில் டிவி வாங்குவதற்கான மிக முக்கியமான தூண்டுதலாகும். பணத்திற்கான மதிப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவை ஆன்லைனில் டிவிகளை வாங்குவதற்கான முக்கிய இயக்கிகள் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil