ரஷ்யா – உக்ரைன் போரால் நடந்த சோகம்.. ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்..!

மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கொரோனா தொற்றின் அதிர்வுகள் இன்னும் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் ரஷ்யா – உக்ரைன் போர் உலக மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது என ஐநா அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்-ஐ வெளியிட்டு உள்ளது.

கொரோனா தொற்றின் போது மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில், லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை முறைக்குத் திரும்பினாலும், இன்னும் விலைவாசி உயர்வு, பொருட்கள் தட்டுப்பாடு போன்ற பவ விஷயங்கள் நம்மை வாட்டி வதைக்கிறது என்றால் அதற்கு முதலும் முக்கியக் காரணம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

டாடா குழுமத்தின் இந்த பங்கினை வாங்கி போடுங்க.. 3 மாதத்தில் நல்ல லாபம் கிடைக்கும்?

உலக நாடுகள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரும்போது விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்யா அரசின் உத்தரவின் பெயரில் ரஷ்ய ராணுவம் தனது அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்தது.

உக்ரைன் - ரஷ்யா போர்

உக்ரைன் – ரஷ்யா போர்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் வல்லரசு நாடுகள் உட்பட நேட்டோ பிரிவில் இருக்கும் அனைத்து நாடுகளும் ரஷ்யா மீது அதிகப்படியான வர்த்தகத் தடைகளை விதித்தது. இதன் வாயிலாக உலகளவில் சப்ளை செயின் அதிகளவில் பாதிக்கப்பட்டது.

உணவு மற்றும் எரிசக்தி

உணவு மற்றும் எரிசக்தி

இதன் விளைவாக உணவு மற்றும் எரிசக்தி பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து உலகளவில் சுமார் 71 மில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்பட்டு உள்ளதாக ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் எச்சரித்துள்ளது.

UNDP நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர்
 

UNDP நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர்

இந்த அறிக்கை குறித்து UNDP நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் கூறுகையில் 159 வளரும் நாடுகளின் தரவுகளை ஆய்வு செய்த போது, ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக மட்டும் இந்த ஆண்டு முக்கியமான பொருட்களின் விலை உயர்வு ஆப்பிரிக்கா, பால்கன் (Balkan), ஆசியா மற்றும் உலக நாடுகளின் சில பகுதிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

51.6 மில்லியன் மக்கள்

51.6 மில்லியன் மக்கள்

ரஷ்யா – உக்ரைன் போர் துவங்கிய முதல் மூன்று மாதங்களில் 51.6 மில்லியன் மக்கள் வறுமையில் வீழ்ந்தனர், ஒரு நாளைக்கு 1.90 டாலர் அல்லது அதற்கும் குறைவாகப் பணத்தைக் கொண்டே மக்கள் வாழ்ந்து வருவதாக ஐநா அறிக்கை கூறுகிறது.

 7.1 கோடி மக்கள் வறுமை

7.1 கோடி மக்கள் வறுமை

கொரோனா, ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் உலகளவில் வறுமையில் இருக்கும் மொத்தம் மக்கள் தொகை 9 சதவீதமாக உயர்த்தியது. கொரோனா தொற்றுக் காலத்தில் லாக்டவுன், வர்த்தகம் மற்றும் வேவைவாய்ப்புச் சரிவு ஆகியவற்றின் மூலம் 12.5 கோடி மக்கள் வறுமையைச் சந்தித்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் 7.1 கோடி மக்கள் வறுமையை எதிர்கொண்டு உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russia-Ukraine War Pushed 7.1 crore People Into Poverty Amid High Inflation says UNDP

Russia-Ukraine War Pushed 7.1 crore People Into Poverty Amid High Inflation says UNDP ரஷ்யா – உக்ரைன் போரால் நடந்த சோகம்.. ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Story first published: Monday, July 11, 2022, 15:26 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.