சென்னை; என்னைத்தான் பொதுச்செயலாளராக்க அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள் என சசிகலா தெரிவித்து உள்ளார். ஏற்கனவே பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ள அதிமுகவில், சசிகலாவும் தன்பங்குக்கு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்.
அதிமுகவின் இன்றைய பொதுக்குழுவில், எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதுடன், அவர் பொருளாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது, அதிமுக தொண்டர்கள் ஒன்றிணையும் நேரம் வந்துவிட்டது என்று கூறினார். மேலும், அதிமுகவில் தலைமைப் பதவியை பிடிக்க நினைத்தால் அது நடக்காது என்று கூறியதுடன்; அது சட்டப்படியும் செல்லாது.
என்னைத்தான் பொதுச்செயலாளராக்க அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள் என்றதுடன், நிழலுக்கு சண்டையிட்டு, நிஜத்தை இழந்து விடக்கூடாது என்றவர், ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு, நிஜத்தை நிச்சயம் அடைவோம் என்றும் தெரிவித்தார்.