தாலி கட்டி குங்குமம் வைக்கும்போது அழுதுட்டேன்! திருமணம் செய்து கொண்ட தன்பால் ஈர்ப்பாளர் தமிழ் தம்பதி


தமிழகத்தில் தன்பால் ஈர்ப்பாளர் தம்பதியான இரண்டு ஆண்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அதன்படி கார்த்திக் – கிருஷ்ணா தம்பதி கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோவிலில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் பேசுகையில், நாங்கள் ஏற்கனவே மோதிரம் மாற்றி கொண்டோம்.

ஆனாலும் தாலி கட்டி கொண்டு திருமணம் செய்ய ஆசை இருந்தது.
அதன்படி சேலம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் கோவிலில் வைத்து திருமணம் செய்ய முடிவெடுத்தோம்.

தாலி கட்டி குங்குமம் வைக்கும்போது அழுதுட்டேன்! திருமணம் செய்து கொண்ட தன்பால் ஈர்ப்பாளர் தமிழ் தம்பதி | Gay Tamil Couple Married In Temple

அங்கு 4 பெண் அடிகளாரும், ஒரு ஆண் அடிகளாரும் இருந்தார்கள். அவங்கள் தலைமையில் தான் எங்கள் திருமணம் நடந்ததுஎன கூறினர்.
கிருஷ்ணா தொடர்ந்து பேசுகையில், என் கையால் கார்த்திக்கிற்கு தாலி கட்டி, குங்குமம் வைத்துவிட்டேன்.

தாலியை கையில் வாங்கும் வரையில் மனதில் ஒரு பதட்டமும், பயமும் இருந்து கொண்டே இருந்தது. தாலி என்பது மிகப்பெரிய பாரம்பரியம் என தெரியும். எங்கள் திருமணத்தை யாராவது நிறுத்திவிடுவார்களோ என மனதுக்குள் எண்ணம் ஓடிகொண்டே இருந்தது.

ஆனால், என் கையால் மூன்றாவது முடிச்சை போடும் போது என்னை அறியாமல் அழுதுவிட்டேன். இனி, உனக்காக நான்.. எனக்காக நீ’ என்பது தான் கார்த்திக்கிடம் அந்த நொடி நான் சொல்ல நினைத்தது என கூறியுள்ளார்.

தாலி கட்டி குங்குமம் வைக்கும்போது அழுதுட்டேன்! திருமணம் செய்து கொண்ட தன்பால் ஈர்ப்பாளர் தமிழ் தம்பதி | Gay Tamil Couple Married In Temple



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.