ஒரு ஸ்மார்ட்போனின் முக்கிய கவனம் தடையில்லா பொழுதுபோக்காக இருக்கும் போது – அது உங்களுக்கு நிகரற்ற அனுபவத்தை அளிக்கும். சாம்சங்கின் சமீபத்திய பட்ஜெட் சாதனம் அதைத்தான் வழங்குகிறது. Samsung Galaxy F13 என்பது பொழுதுபோக்கை அதன் முக்கிய கருவாக வைத்திருக்கும் அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். ஒரு மாற்றத்தை வழங்கக்கூடிய, வாழ்க்கையை மிகவும் எளிதாக்கக்கூடிய பல அம்சங்களை Samsung தனது பயனர்களுக்காகச் சேர்த்துள்ளது. அது மிகப்பெரிய FHD+ டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி, RAM PLUS என எதுவாக இருந்தாலும், Galaxy F13 ஆனது உங்கள் பொழுதுபோக்குத் தேவைகளுக்கு ஏற்ற ஸ்மார்ட்போனாக அமைகிறது. மேலும், இன்னும் சிறப்பானது என்னவென்றால், இதன் விற்பனை இப்போது Flipkart, Samsung Online Store ஆகிய தளங்களில் நேரலையில் உள்ளன. ரூ.11,000க்கும் குறைவான விலையில், பல அற்புதமான அம்சங்களுடன் இருக்கும் Galaxy F13 ஸ்மார்ட்போனை இப்போதே ஏன் வாங்க வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்!
இடைவிடாத பொழுதுபோக்குக்கு – 6000mAh பேட்டரி!
நீங்கள் அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய ஸ்மார்ட்போன் நிச்சயமாக உங்களுக்கு நல்ல அனுபவத்தை தராது. நல்வாய்ப்பாக Samsung Galaxy F Series ஸ்மார்ட்போன்கள் நீண்ட ஆயுள் கொண்ட பேட்டரி பாரம்பரியத்தை கொண்டுள்ளன. மேலும் சமீபத்திய
Galaxy F13
, அதனைத் தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச் செல்கிறது. உங்களின் இடைவிடாத பொழுதுபோக்கிற்காக, ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இது நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை எளிதாக அதிக நேரம் பார்க்க அனுமதிக்கிறது. கூடுதலாக நீங்கள் Galaxy F13 போனை சார்ஜ் செய்ய விரும்பினால், ஸ்மார்ட்போன் 15W பாஸ்ட் (இன்-பாக்ஸ்) சார்ஜருடன் வருகிறது. அது எந்த நேரத்திலும் பேட்டரியை வேகமாக ரீசார்ஜ் செய்ய உதவும்.
தெளிவான பொழுதுபோக்கு அனுபவத்திற்கு – FHD+ டிஸ்ப்ளே!
Galaxy F13 போனின் முக்கிய கவனம் உங்களுக்கு ஒரு சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குவதாகும். Galaxy F13, அதன் மிகப்பெரிய 16.72cms / 6.6-inch FHD+ டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேயை தேர்ந்த அனுபவத்திற்கு மாற்றுகிறது. பிரமாண்டமான டிஸ்ப்ளே சிறந்த காட்சி தரத்திற்கு வழி செய்கிறது. விரிந்த திரையில் உங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் அல்லது நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மட்டுமல்லாமல், நண்பர்களுடன் மறக்கமுடியாத ஆன்லைன் கேம்களையும் உங்களால் விளையாட முடியும்.
தடையற்ற பொழுதுபோக்கிற்காக – Auto Data Switching
பலருக்கு, பயணம் என்பது தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான செயலாகும். நாட்டில் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி கண்டாலும், சில மூலை முடுக்குகளில் வலுவான நெட்வெர்க் இல்லாமல் இருக்கும். இது சில சந்தர்ப்பங்களில் நண்பர்கள், உறவினர்களுடன் இணைப்பில் இருப்பதை தவிர்க்கிறது. இருப்பினும், Galaxy F13 உடன், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருப்பது மிகவும் எளிதானது. உங்கள் முதன்மை சிம்மில் நெட்வொர்க் சிக்னல் இல்லாதபோது, டேட்டா இணைப்பைத் தேடி உங்கள் இரண்டாம் நிலை சிம்மிற்கு ஸ்மார்ட்போன் தானாகவே மாறுகிறது. இந்த வழியில், நீங்கள் தொடர்ந்து இணைந்திருக்கலாம் மற்றும் கவலையின்றி எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
இணையற்ற பல்பணி அனுபவத்திற்கு – RAM Plus உடன் 8GB RAM
இளம் ஸ்மார்ட்போன் பயனர்களின் முக்கிய வலிகளில் ஒன்று பல்பணி. ஸ்மார்ட்போனில் உள்ள பயன்பாடுகளின் வரிசையுடன், ரேம் போதுமானதாக இல்லாவிட்டால், அவற்றுக்கிடையே மாற வேண்டிய சூழல் வரும்போது, ஒரு குழப்பமான சூழலாக இருக்கும். இந்த சூழலை யாரும் அனுபவிக்க விரும்புவதில்லை. எனவே இதனை சரிசெய்யும் விதமாக,
Galaxy F13
போன் RAM Plus அம்சத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், உங்கள் போனின் ஸ்டோரேஜ் மெமரியில் உள்ள காலி இடத்தை எடுத்துக்கொண்டு அதை மெய்நிகர் RAM ஆக பயன்படுத்த முடியும். அந்தவகையில் RAM மெமரியை 8GB ஆக இரட்டிப்பாகிறது. இப்போது, கூடுதல் RAM மூலம், நீங்கள் எளிதாக பல்பணி செய்யலாம். பயன்பாடுகளுக்கு இடையில் சுலபமாக மாறலாம். உங்கள் தினசரி பொழுதுபோக்கிலிருந்து ஓய்வு எடுக்க வேண்டியதில்லை.
நிகழ்ச்சிகள் அல்லது திரைப்படங்களை அதிகமாகப் பார்ப்பதற்கு ஏற்ற ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க விரும்பினால், பெரிய பேட்டரியைக் கொண்ட, பல மணிநேரம் நீடித்து வேலை செய்யக்கூடிய, ஒரே நேரத்தில் பயன்பாடுகளுக்கு இடையே சுலபமாக மாறக்கூடிய, எப்போதும் தொடர்பில் இருக்க உதவும் சிறந்த ஸ்மார்ட்போனான Samsung Galaxy F13 போனை கருத்தில் கொள்ளலாம். அம்சங்கள் மட்டுமில்லாமல், போனின் விலையும் உங்களுக்கு உகந்ததாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் காத்திருங்கள்! இன்னும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இன்னும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அது ஒரு உண்மையான பொழுதுபோக்கு கனவை நிறைவேற்றும் வகையில் இருக்கும். அதில் சில குறிப்பிடத்தக்க அம்சங்களைக் காணலாம்.
Galaxy F13 ஸ்மார்ட்போனை இயக்குவது சக்திவாய்ந்த Exynos 850 புராசஸர் ஆகும். இது போனின் இயக்கத்தை சீராக வைத்திருக்கும். எனவே, உங்கள் பொழுதுபோக்குக்கு இடையில் தேவையற்ற இடைநிறுத்தங்கள் ஏதும் ஏற்படாது. Galaxy F13 ஆனது ஒரு பெரிய 50MP டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது உங்கள் சமூக வலைத்தள பக்கங்களை ஆக்டிவாக வைத்திருக்கவும், தெளிவான படங்களை எடுக்கவும் உதவுகிறது. சாதனத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க, Samsung அதன் பிரத்யேக KNOX பாதுகாப்பு அம்சத்தை இந்த போனில் சேர்த்துள்ளது. இந்த மேம்பட்ட வன்பொருள்-மென்பொருள் பாதுகாப்பு அடுக்கு உங்கள் தரவை எந்த வகையான அச்சுறுத்தல்கள் மற்றும் தீம்பொருளிலிருந்தும் பாதுகாக்கிறது. Galaxy F13 ஸ்மார்ட்போன் Waterfall Blue, Sunrise Copper, Nightscreen Green ஆகிய மூன்று கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது.
உங்களுக்காக ஒன்றை நீங்கள் வாங்க விரும்பினால்,
Flipkart
அல்லது
Samsung Online Store
பக்கங்களைப் பார்க்கவும். ஏனெனில் Galaxy F13 ஸ்மார்ட்போனை வாங்குவதற்கான விற்பனை இப்போது நேரலையில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை* 4GB+64GB மாறுபாட்டிற்கு ரூ.10,999 ஆகவும், 4GB+128GB வேரியண்டிற்கு ரூ.11,999 ஆகவும் அறிமுக சலுகையில் கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயனர்களுக்கு, நேரடி தள்ளுபடியாக ரூ.1000 வழங்கப்படுகிறது.
*T&C Apply
Disclaimer: This article has been produced on behalf of Samsung by Times Internet’s Spotlight team.