இலங்கையில் அரசியல் ஸ்திரம் மற்றும் ஒத்துழைப்பு அதேபோல அமைதியான அதிகார பரிமாற்றம் ஆகியவை அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.
மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தின் மத்தியில் கடந்த 9ஆம் திகதி இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஆக்கிரமித்துள்ளனர்.
இதனையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
அதேநேரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சர்வகட்சி அரசாங்கத்துக்கு இடமளிக்கும் வகையில் தாம் பதவி விலகப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,