கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்த கோட்டாபய குடும்பம் அங்கிருந்து கட்டுநாயக்க விமானம் நிலையம் சென்று, வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது, கோட்டாபய இரத்மலானை விமானப்படைத் தளத்தில் உள்ளதுடன், அவரைச் சந்திப்பதற்காக முப்படைத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்றுள்ளது.
அவர் இரத்மலானையிலிருந்து எந்த நாட்டிற்கு சென்றார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.