Apple iPhone 14 Launch Date Leaked:
ஆப்பிள்
அதன் ஐபோன் 14 சீரிஸ் ப்ரோ மாடல்களுக்கு பல பெரிய மேம்படுத்தல்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய ஆப்பிள் ஐபோன் 14 செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபோன் 14 ப்ரோ மாடல், பேட்டரி ஆயுளை LTPO டிஸ்ப்ளேவில் இருந்து பார்க்கலாம். Tipster iHacktu iLeaks வெளியிட்ட தகவல்களின்படிசெப்டம்பர் 13, 2022 அன்று ஐபோன் 14 சீரிஸ் வெளியீட்டு நிகழ்வு இருக்கும் என்றும், செப்டம்பர் 23 முதல் பல நாடுகளுக்கு புதிய ஐபோன்களை நிறுவனம் அனுப்பத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Oppo, OnePlus போன்களை விற்க தடை – சீன நிறுவனங்களுக்கு எதிராகக் கிளம்பிய Nokia!
ஐபோன் 14 எதிர்பார்க்கப்படும் விலை
ஐபோன் 14 ப்ரோ தொடக்க விலை இந்திய மதிப்பில் ரூ.83,000 ஆக இருக்கலாம் என்றும், ப்ரோ மற்றும் ப்ரோ அல்லாத பதிப்பின் விலைக்கு இடையே ரூ.15,000 வித்தியாசம் இருக்கும் என்றும் அந்த வெளியாகியுள்ள தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
Nothing Phone 1 அறிமுக சலுகைகள் இதுதான் – ஆனா, ஒரு முக்கியமான விஷயம் இருக்காது!
ஐபோன் 14 தொடரின் சிறப்பு என்ன?
ஐபோன் 14 தொடர் அறிமுகம் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியதில் இருந்து, என்னென்ன மாறுதல்களை ஆப்பிள் நிறுவனம் கொண்டுவரவுள்ளது என்ற கணிப்புகளும் வெளியாகத் தொடங்கின.
முதலாவதாக iPhone 14 தொகுப்பில் இருந்து மினி பதிப்பு நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ஒரு புதிய ஐபோன் மேக்ஸ் இருக்கும். தொடரில் நான்கு ஐபோன் மாடல்கள் இருக்கும். ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்,ஆகியவை இதில் அடங்கும்.
ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ ஆகிய இரு மாடல்களும் 6.1 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 6.7 இன்ச் டிஸ்ப்ளேவுடன் இருக்கும்.
92732777புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8ஆப்பிள் ஐபோன் 14 தொகுப்புடன், புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 ஸ்மார்ட்வாட்ச் தொகுப்பை நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய தொடரை விட புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் பெரிய மேம்பாடுகளுடன் வரும் என்று கூறப்படுகிறது. எனினும், ஆப்பிள் இன்னும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை.