Xiaomi Smart Fan Price: இந்தியாவில் தனது தயாரிப்பு பட்டியலில், சீன நிறுவனமான சியோமி புதிய வீட்டு உபயோக மின்சாதன பொருள் ஒன்றை சேர்த்துள்ளது. புதிய ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2-ஐ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டில் Xiaomiயின் 8ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் கீழ் இந்த சிறப்பு தயாரிப்பு கொண்டுவரப்பட்டுள்து. புதிய ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 இரட்டை பிளேடு அமைப்புடன் வருகிறது. இதில் BLDC இன்வெர்ட்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் Redmi 10 போனை வெறும் 249 ரூபாய்க்கு வாங்குவது எப்படி?
இதனால் மிகக்குறைந்த அளவே மின்சாரம் செலவாகும். இந்த மின்விசிறியில் குரல் கட்டுப்பாடு வசதி உள்ளது. எனவே உங்கள் குரல் இந்த மின்விசிறியை ஆன் மற்றும் ஆஃப் செய்யப் போகிறது. Xiaomi Smart Standing Fan 2 இன் விலை, அம்சங்களை குறித்து விரிவாகப் பேசலாம்.
சியோமி ஸ்மார்ட் மின்விசிறி சிறப்பம்சங்கள் – Xiaomi Smart Standing Fan 2 Features
Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 மிகவும் இலகுவானது. இதன் எடை 3 கிலோ மட்டுமே. வெள்ளை நிறம் மற்றும் சிறந்த வடிவமைப்பு கொண்ட இந்த மின்விசிறியை உங்கள் தேவைக்கேற்ப வீட்டின் எந்த இடத்திலும் வைக்கலாம்.
இது 7 + 5 இறக்கைகளைக் கொண்டுள்ளது. இது அதிக சக்தி வாய்ந்த காற்றோட்டத்தை உருவாக்கும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. Xiaomi தனது ஸ்மார்ட் ஃபேனில் BLDC காப்பர்-வயர் இன்வெர்ட்டர் மோட்டாரைப் பயன்படுத்தியுள்ளது.
5G Adani Group: அம்பானிக்கு ஜியோ… அதானிக்கு? டெலிகாம் துறையில் கால்பதிக்கும் குழுமம்!
எனவே, மின்விசிறியை அதிக நேரம் இயக்க முடியும். அலுமினிய கம்பி மோட்டார்களை விட நீண்ட ஆயுளை இந்த மோட்டார் வழங்கும். இந்த ஸ்மார்ட் மின்விசிறி 15W வாட்ஸ் மின்சாரத்துக்கும் குறைவாகவே பயன்படுத்துகிறது.
BLDC மோட்டார் சாதாரண மின்விசிறியை போன்ற அதிக சத்தத்தை எழுப்பாது. விசிறியின் சத்தம் 30.2dB முதல் 55.8dB வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. Xiaomi-இன் இந்த விசிறி Natural Breeze Simulation Algorithm-ஐ பயன்படுத்துகிறது.
Oppo, OnePlus போன்களை விற்க தடை – சீன நிறுவனங்களுக்கு எதிராகக் கிளம்பிய Nokia!
சியோமி ஸ்மார்ட் மின்விசிறி விலை – Xiaomi Smart Standing Fan 2 Price
இந்த மின்விசிறியை சியோமி ஹோம் ஆப் மூலம் போனில் இருந்து இயக்கலாம். பயனர்கள் தங்கள் வசதியைப் பொறுத்து, காற்றோட்டத்தைப் பெற, விசிறியின் வேகத்தை 1 முதல் 100 வரை எங்கும் மாற்றலாம். இந்த Xiaomi மின்விசிறியை ஒரே ஒலியுடன் இயக்க முடியும்.
அலெக்சா, கூகுள் அசிஸ்டண்ட் கட்டளைகளை வழங்குவதன் மூலம் இதை எளிதாக இயக்க முடியும். மேலும் பல சிறப்பம்சங்கள் அடங்கிய இந்த ஸ்மார்ட் மின்விசிறியின் விலை ரூ.9,999 ஆக உள்ளது. ஆனால், ஜூலை 11 முதல் ஜூலை 18 வரையில் முன்பதிவு செய்பவர்கள் இந்த ஸ்மார்ட் ஃபேனை ரூ.5,999 கொடுத்து பெற முடியும்.