மயிலாடுதுறையில், பயனற்ற கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 70 வயது மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
மயிலாடுதுறை காந்தி நகரைச் சேர்ந்த மூதாட்டி நிர்மலா, அவரது வீட்டுக் கொல்லைப்புறத்தை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பயனற்ற கழிவுநீர் தொட்டி மேல் ஏறி சுத்தம் செய்த போது, கழிவுநீர் தொட்டி மூடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் உடைந்ததில் மூதாட்டி தொட்டிக்குள் விழுந்தார்.
மூதாட்டியின் கூச்சல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மூதாட்டியை மீட்டனர்.