வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கைக்கு புதிய அதிபர் வரும் 20-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டால் மக்கள் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்கும் புகுந்து ரகளை செய்தனர். பிரதமர் இல்லத்தை தீ வைத்து கொளுத்தினர்.
இதையடுத்து அனைத்துக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் வகையில் இலங்கை அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய கோத்தபய , தற்போது வெளிநாடு தப்பியோடிவிட்டதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் வரும் 20-ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோத்தபய ராஜபக்சே ஜூலை 13ம் தேதி பதவி விலகினால், அதிபர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19ம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் 20ம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement