ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனிய பகுதியான நோவா ககோவ்காவில் உள்ள வெடிமருந்து கிடங்கை உக்ரைனிய பாதுகாப்பு படை தகர்த்தெறிந்து உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உக்ரைனின் கெர்சன் பகுதிகளை ரஷ்ய படைகள் முழுவதுமாக அவர்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இருந்த நிலையில், அங்கு ரஷ்ய படைகளுக்கு உதவும் விதமாக வெடிமருந்து கிடங்குகளை ரஷ்ய ராணுவம் அமைத்து இருந்தது.
இவ்வாறு கெர்சன் பிராந்தியத்தின் நோவா ககோவ்காவில் இருந்த வெடிமருந்து கிடங்கை உக்ரைனிய பாதுகாப்பு படை முழுவதுமாக தாக்குதல் நடத்து அழித்துள்ளது.
இதனை அந்த பிராந்திய நிர்வாக தலைவரின் ஆலோசகர் Serhiy Hlan உறுதிப்படுத்தியுள்ளார்.
A #Russian ammunition depot was hit in the occupied territory of #Kherson region.
An adviser to the head of the Kherson regional state administration, Serhiy Hlan, confirmed that the #Ukrainian Armed Forces had hit an ammunition depot in #NovaKakhova. pic.twitter.com/O9wUznXvwL
— NEXTA (@nexta_tv) July 11, 2022
மேலும் இதுத் தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவலில், ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நோவா ககோவ்காவில்(Nova Khakhovka) உள்ள வெடிமருந்து கிடங்கை உக்ரைனிய பாதுகாப்பு படைகள் தாக்குதல் நடத்து அழித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த வெடிமருந்து கிடங்கு, சோகில் உள்ள முன்னாள் ஆயுதகருவி ஆலை பகுதியில் அமைந்துள்ளது என தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த தாக்குதலின் பாதிப்புகள் எவ்வளவு மற்றும் உயிரிழப்புகள் எத்தனை ஆகிய முழுவிவரங்கள் இதுவரை வெளிவரவில்லை.
Photos of the large explosion in Nova Khakhovkahttps://t.co/UiRR4fCAln https://t.co/gdqBj9cSeg pic.twitter.com/Ar5EsSNyGG
— Euromaidan Press (@EuromaidanPress) July 11, 2022
கூடுதல் செய்திகளுக்கு: தாய்நாட்டிற்கு திரும்பும் உக்ரைனிய அகதிகள்: எண்ணிக்கையை வெளியிட்ட ஐரோப்பிய ஆணையம்
ஆனால் வெடிமருந்து ஆலை வெடித்து சிதறும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.