சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் கடும் மோதல் நிலவியது. இந்நிலையில் அதிமுகவின் தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றி உள்ளனர்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றுவருகிறது. 16 தீர்மானங்களில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருப்பார் என்ற விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இத்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு பக்கம் அதிமுக பொதுக்குழு நடைபெற்று வரும் நிலையில் மறுபக்கம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றி உள்ளனர். அலுவலகத்தை சூழ்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அலுவலகத்திற்குள் நுழைந்து, முக்கிய ஆவணங்களை எரித்தனர். மேலும் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களை தடுத்தபோது கடும் மோதல் ஏற்பட்டது. மாறி மாறி கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ” சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பணி சிறக்க எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார். இதுபோலவே அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.